"அரசு பணியாளர்களுக்கு தமிழ் புலமை அவசியம்" - அமைச்சர் பிடிஆர் கருத்து!

 
பிடிஆர்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித்தேர்வுகளில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் பணி பெற்றதாக குளறுபடி எழுந்தது. இது தமிழ் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைச் சுட்டிக்காட்டிய திமுக, ஆட்சிக்கு வந்தால் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்று கூறியது. அதன்படி நேற்று  போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தாளைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தன. 

அரசுப் பணியிடங்களில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவிகீதம் ஆக  உயர்த்தப்படும்: அமைச்சர் பிடிஆர் - Tamil Today News

இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இதுதொடர்பாகப் பேசிய நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தாள் கட்டாயமாகப்பட்ட வேண்டும் என்றேன். எனது கோரிக்கைக்கு இணங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும். கடந்த காலங்களில் தமிழ் மொழி அறியாத பிற மாநிலப் பணியாளர்கள் பலர் முறையாகப் பிரித்துப் பணி அமர்த்தப்படவில்லை. அதனைத் திருத்தும் வகையில் இந்த அரசாணை அமைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு போதுமானதல்ல” : நிதி அமைச்சர் பிடிஆர் அதிரடி!!

கொரோனா காலத்தில் வெளி மாநிலப் பணியாளர்கள் காரணமாக நிர்வாகத்தில் பல தவறுகளும் குளறுபடிகளும் ஏற்பட்டன. இதனைக் களைவதற்காக அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை இருப்பது அவசியம். தற்போது பொறுப்பெற்றுள்ள அரசைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அடிப்படை முறைகளில் சில மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்துள்ளது. போட்டித் தேர்வுக்கெனத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் தாகம் புரிந்ததாலேயே தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது” என்றார்.