அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி!
Jan 25, 2025, 15:25 IST1737798956611
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் ரகுபதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி சென்ற போது தலைச்சுற்றல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அமைச்சர் ரகுபதி உடனயாக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். தற்போது அமைச்சர் ரகுபதி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


