லியோ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை - அமைச்சர் பேட்டி

 
Ragupathi

லியோ திரைப்பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ம் தேதி உலகம் முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாக உள்ளது. லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு காலை 4 மணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் படக்குழுவினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. 

leo

இந்த நிலையில், லியோ திரைப்பட சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை ''லியோ' படத்திற்கு நாளொன்றுக்கு 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்படும். இவ்வாறு கூறினார்.