தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுவதுதான் ஒரே தீர்வு - அமைச்சர் ரகுபதி

 
Ragupathi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுவதுதான் ஒரே தீர்வு என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கல் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது: தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டார் ஆளுநர் ரவி. 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.  2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்.  2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியது தவறு.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிர்வாகம் முடங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்பப் பெறுவதுதான் ஒரே தீர்வு. இவ்வாறு கூறினார்.