அண்ணாமலைக்கு என்னுடைய பெரிய நன்றி; வழக்கிலிருந்து நான் விடுதல்- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி

பாஜக கூட்டணி கட்சிகளில் அமலாக்கத் துறையும் ஒன்று என்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்தார் நானும் பல பேட்டிகளில் கூறியுள்ளேன் அமலாக்கத்துறை பாஜகவின் கூட்டணி கட்சி தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ரகுபதி

புதுக்கோட்டையில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைக்கு எந்த துறையும் விதி விளக்கல்ல, யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு தற்போது நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு, யார் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்படும் பொழுது சட்டத்தின் முன்பாக நிறுத்துவது கடமை. இதில் தமிழ்நாடு முதலமைச்சருடைய அரசு துணிச்சலோடு செயல்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை மீது தொடர்ந்து இது போன்ற தகவல் கிடைத்தால் அங்கு சென்று லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். இது என்றைக்கும் நடந்து கொண்டுள்ள நடவடிக்கை தான். அமலாக்க துறையை வைத்து அல்லது வேறு யாரை வைத்து மிரட்டினாலும் எந்த மிரட்டலுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உடைய அரசு பணியாது அஞ்சாது, நேர்மையாக நடக்கும். நாங்கள் துணிச்சலாக செயல்படுவோம் என்று தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். யாரைக் கண்டும் அஞ்சுகின்ற இயக்கம் திமுக கிடையாது. சபாநாயகர் அப்பாவு தைரியமானவர், அவருக்கு வந்த மிரட்டலை அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் திரும்பி அனுப்பியுள்ளார்... அவர் என்ன காரணத்திற்காக திரும்பி அனுப்பினாரோ அதற்கான விளக்கங்களோடு மீண்டும் திருப்பி அனுப்பப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ஒரு ஊழல்வாதி என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் என் உள்ளிட்ட சில அமைச்சர்களின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாங்கள் நீதித்துறை மீது வைத்துள்ள மரியாதைக்கும் மதிப்புக்கும் எங்களுக்கு கிடைத்திருக்கின்ற மிகப் பெரிய வெற்றி. ஏனென்றால் கிழமை நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஒவ்வொன்றிலும் விடுதலை பெற்று வந்துள்ளோம். இதை உடனடியாக நினைவுபடுத்தி விரைந்து முடிக்க உதவிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி.

அமலாக்கத்துறை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமா அல்லது லஞ்ச ஒழிப்புத்துரையே தொடர வேண்டுமா என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு செய்வார். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை இறுதிவரை பார்ப்போம், 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றோம்” என்றார்.