ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “உண்மை குற்றவாளி யாரென்று தெரிந்தால் ஈபிஎஸ் கூறட்டும்”- அமைச்சர் ரகுபதி

 
Ragupathi

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி, உண்மை குற்றவாளிகள் யார் என தெரிந்தால் கூறட்டும். எவ்வித சமரசத்திற்கு இடமின்றி சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் கடமை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: “உண்மை குற்றவாளி யாரென தெரிந்தால் இபிஎஸ் கூறட்டும்” -  அமைச்சர் ரகுபதி | Minister Raghupathi on EPS comment on Armstrong murder

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிபிசிஐடி சிறப்பான புலனாய்வு செய்து வருவதால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். யார் யாரெல்லாம் இதில் சம்மந்தப்பட்டுள்ளனரோ அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதே அரசின் நோக்கம். எந்தவிதமான சமரசத்திற்கும் இதில் இடமில்லை. யார், யார் சதி செயலில் ஈடுபட்டுள்ளனரோ, அது தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் புலனாய்வின் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். இறுதியில் நீதிமன்றம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். 

உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்கவில்லை என கூறும் எடப்பாடி பழனிசாமி உண்மையான குற்றவாளி யாரென சொல்லட்டும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறார். வேண்டும் என்று காலதாமதம் என சொல்ல முடியாது, ஜாமீன் வழங்குவது என்பது நீதிமன்றத்தை பொருத்தது, நீதிமன்றத்ததின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியாது” என தெரிவித்தார்.