"யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கும் சூழல் திமுகவுக்கு ஏற்படாது"- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி

யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கும் சூழல் திமுகவுக்கு ஏற்படாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

FOUNDER PROFILE – Welcome to Karpaga Vinayaga College of Nursing

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனை பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவியம் ராம காவியம். சமுத்துவத்தையும், சமூக நீதியும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன். ராமர் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி. ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்தது, அப்படிதான் திமுக ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது.

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனையால் அருதி பெரும்பான்மையோடு திமுக ஆட்சி அமைக்கும். யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கும் சூழல் திமுகவுக்கு ஏற்படாது” என்றார்.