ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சி போட வேண்டாம்- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மசோதாக்களை இழுத்தடிக்க ஆளுநர் ரவி முயற்சி: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  புகார் | TN Law Minister Raghupathi comments on Vice Chancellor appointment  bill - hindutamil.in

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தில் உள்ள 53 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த 5538 மாணவ மாணவிகளுக்கு 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதிவண்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை, மதுரை, திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட புதிய வழித்தடங்களில் 11 பேருந்து சேவையை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதையே அச்சப்படும் நிதியமைச்சர் திருக்குறளையும், பாரதியாரையும் மறந்துவிட்டார். மோடியை தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற விடாமல் தடுத்தது இந்தியா கூட்டணி. ஒன்றிய அரசின் நிதி கிடைக்கவில்லை என்றாலும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாடு முதல்வர் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செயல்பட்டு வருகிறார்.

Governor wants to save ADMK former ministers - Law Minister Raghupathi |  'அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை கவர்னர் காப்பாற்ற நினைக்கிறார்' -  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி


பீஹார், ஆந்திரா இல்லையென்றால் மோடி இல்லை. அதற்காகவே அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து குற்றவாளிகள் கைது செயப்பட்டு வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம்” என எச்சரித்தார்.