மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த விசிக! திமுக கூட்டணியில் விரிசலா?- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அவர்கள் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் கூட்டணி என்பது திமுகவோடு தான் இருப்பார்கள். 
முதலமைச்சரும் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள்... விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஏழைகள் வீடுகள் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 12 ஆயிரம் பேருக்கு மேல் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு காப்பீட்டு திட்டத்திற்கு அறுவை சிகிச்சைக்கு உடனடியாக தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் காவல்துறை 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் பாதுகாப்பாக உள்ளது. கைதிகளுக்கு நோய்வாய்பட்டால் அவர்களும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம், அதன்படி அதிமுகவினர் கலந்து கொள்ளலாம். ஆனால் கூட்டணி என்பது திமுகவோடு தான் அவர்கள் இருப்பார்கள், முதலமைச்சரும் திருமாவளவன் நெருங்கிய நண்பர்கள். ஆகவே யார் அழைத்தாலும் முதல்வரை விட்டு திருமாவளவன் எங்கேயும் போக மாட்டார். புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்படவில்லை, தற்காலிகமாக fl2 என்ற பெயரில் நாகரீகமாக பார் உரிமம் பெற்று நடத்தி வருகின்றனர்” என்றார்.