"பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஆதவ் அர்ஜுனா பேசுகிறார்"- அமைச்சர் ரகுபதி
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பாடாக மதசார்பின்மையை பற்றி தமிழ்நாடு ஆளுநர் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு சட்டக் கல்லூரியில் தான் அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதை நீதிபதி கூட நேரில் சென்று பார்க்கலாம். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் எப்படி உள்ளது வெளி மாநிலங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் எப்படி உள்ளது என்பதை எல்லாம் பார்க்கலாம். தனியார் சட்டக் கல்லூரிகளைவிட பன்மடங்கு வசதிகளை உள்ள சட்டக் கல்லூரி தான் தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய சட்டக் கல்லூரி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரண்பாடாக மதசார்பின்மையை பற்றி தமிழ்நாடு ஆளுநர் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது
ஆதவ் அர்ஜுனா தனக்கு பேரும் புகழும் ஏதாவது ஒரு வகையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கிண்டி பேசினால் தான் பிரபலமாக முடியும் என்ற கண்ணோட்டத்தில் அவர் அப்படிப்பட்ட கருத்துக்களை பேசிக்கொண்டு வருகிறார். நிச்சயமாக விசிக- திமுக இடையே பிரச்சனை இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனே தெளிவாக தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு கட்சியின் தலைவரே தெளிவுபடுத்தி கூறியுள்ள போது கட்சிக்கு கீழ் உள்ள யார் என்ன சொன்னாலும் அவசியம் கிடையாது” என்றார்.