ஆளுநர் எப்போதும் ஏட்டிக்கு போட்டிதான்... திராவிடம் என்ற சொல் ஆளுநருக்கு வேப்பங்காய் போல் இருக்கும்- ரகுபதி

 
ரகுபதி ரகுபதி

ஆளுநர் எப்போதும் ஏட்டிக்கு போட்டியாக தான் இருப்பார் திராவிடம் என்ற சொல்அவருக்கு வேப்பங்காயை போல இருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் பல்வேறு அரசு திட்டங்களை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று திறந்து வைத்தார். அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள கூடலூர் ஊராட்சி சித்தூர் கிராமத்தில் சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆளுநரின் பழக்க வழக்கமே எப்போதுமே ஏட்டிக்கு போட்டி தான் திராவிடம் என்ற சொல்லை அவருக்கு வேப்பங்காயை போல இருக்கிறது. அவர் பிரிவினைவாத சக்திகள் என்று சொன்னார் 1962ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவிற்கும் அன்றைக்கு யுத்தம் வந்த நேரத்திலே திராவிட நாடு திராவிடருக்கு என்ற கொள்கையோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் திமுக. ஆனால் இந்தியாவினுடைய ஒன்றிய ஒற்றுமையை கருதி இந்தியாவினுடைய நலனை கருதி இந்திய மக்கள் எல்லோரும் இந்திய பேரரசுக்கு பின்னாலே வலிமையோடு இருந்தால் தான் இந்தியா வலிமை உடைய வல்லரசாக இருக்க முடியும் என்பதற்காக எங்களுடைய திராவிட நாடு கொள்கையை இப்போது முக்கியமல்ல எங்களுடைய முக்கியம் இந்தியாவினுடைய பாதுகாப்பு என்று சொல்லி தீர்மானம் போட்டது பேரறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் தான். எனவே ஒற்றுமை என்பதிலேயே எங்களுக்கு ஈடு இணையாக யாரையும் பார்க்க முடியாது. ஆளுநர் கற்பனையினாலே இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இணையவழி குற்றங்களை தடுக்க வேண்டியது ஒன்றிய அரசுதான் மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் அவை கிடையாது ஒன்றிய அரசு எல்லா மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்து சட்டம் கொண்டு வந்து ஒன்றிய அரசு வந்தால் தான் இணையவழி குற்றங்களை தடுக்க முடியுமே தவிர மாநில அரசு முடிந்த அளவு தான் தடுக்க முடியும் ஒரு எல்லைக்கு மேலே போக முடியாது ஒருவன் ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவில் இருந்தே மராட்டியத்தில் இருந்தோ பிஹாரிலிருந்தோ இணையவழி குற்றங்களிலே தமிழ்நாட்டில் ஈடுபடுகிறார் என்று சொன்னால் அவரை அங்கே போய் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு குறைவு ஆனால் அதை‌ ஒன்றிய அரசு ஒன்றாக இருந்து செய்தால் தடுக்க முடியும். ஒன்றிய அரசால் தான் முடியும். மாநில அரசு எப்போதும் முழு ஒத்துழைப்பை தரும் மாநில அரசு தன்னுடைய சக்திக்கு உட்பட்டு இணையவலி குற்றங்களை தடுத்துக் கொண்டிருக்கிறது.

சிறையில் துன்புறுத்தல் இருந்தால் அவர்கள் நிச்சயம் வெளியே வந்து சொல்லி இருப்பார்கள் சிறையில் நாங்கள் யாரையும் துன்புறுத்துவது கிடையாது. இன்றைய சிறைச்சாலை என்பது சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை என்றுதான் அழைக்கப்படுகிறது. அங்கே இருக்கின்ற கைதிகளை கைதிகள் என்று அழைப்பதில்லை சிறைவாசிகள் என்று அழைக்கின்றோம் அவர்களை பாசத்தோடு தான் பார்த்துக் கொள்கிறோம் அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகள் தரப்படுகிறது மன அழுத்தத்தின் காரணமாக அங்கே தனிமையில் இருக்கக்கூடியவர்கள் கூட அந்த மன அழுத்தம் போக்குவதற்கான நடவடிக்கைகளை சிறை நிர்வாகம் மேற்கொள்கிறது அதை மீறி ஒரு சில அசம்பாவிதங்கள் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.