விஜய்யை கண்டு நாங்கள் பயப்படவில்லை - அமைச்சர் ரகுபதி

 
ச்

எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர், அவருடன் கூட்டணி போவதற்கு யாரும் தயாராக இல்லை, தேமுதிக மட்டும் தான் அவர்களுடன் உள்ளது. அவர்களும் கலண்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர், அவருடன் கூட்டணி போவதற்கு யாரும் தயாராக இல்லை தேமுதிக மட்டும் தான் அவர்களுடன் உள்ளது அவர்களும் கலண்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தனி மரம் தோப்பாகாது எடப்பாடி பழனிச்சாமி கனவு பலிக்காது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் செயல்படுத்தக்கூடிய திட்டங்களும் மக்களுக்கான திட்டங்கள்தான், உதாரணத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்றவைகள்.  மக்களுக்கான திட்டங்களை இந்த அரசு செய்ததைப் போல இதுவரை எந்த அரசும் இந்தியாவிலே செய்ததில்லை இதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது திட்டங்களை அவரால் சொல்ல முடியுமா? எந்த வகையிலும் 2026 களம் மாறாது களம் எங்களது கூட்டணி எங்களது. இந்தியா கூட்டணி வெல்லும்.


கூட்டணி ஆட்சி அமையும் என்று அன்புமணி ராமதாஸ் பகல் கனவு கண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நிச்சயம் எங்களது கூட்டணி வென்று எங்களது ஆட்சி தான் அமையும். மு க ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று புதிய வரலாற்றை படைப்பார். கூட்டணியை பிரிப்பதற்கு யார் எந்த சதி வேலைகளை செய்தாலும் எங்களுடன் இருப்பவர்கள் நட்போடும் பாசத்தோடும் இருப்பவர்கள் எந்த சதி வேலைகளிலும் அவர்கள் சிக்க மாட்டார்கள். நிச்சயமாக திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார். விஜய் கட்சியை பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது பயமும் கிடையாது. மடியில் கணமும் இல்லை வழியில் பயமும் இல்லை. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. திமுக எதைக் கண்டும் பயப்படவில்லை தேர்தல் களத்தில் நாங்கள் இறங்கிவிட்டோம். மற்றவர்கள் இன்னும் இறங்கவில்லை. பணிகளை தொடங்கி விட்டோம் நிச்சயமாக மக்களிடம் எங்களுடைய திட்டங்களை கொண்டு சென்று சேர்த்து அதன் மூலமாக வாக்குகளை பெறுவோம் அதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.