ஆளுநர் ரவி அவதூறு பரப்புகிறார் - அமைச்சர் ரகுபதி

 
ச் ச்

தமிழர்களுக்கு எதிராக பேசுவதே கவர்னரின் வேலை என அமைச்சர் ரகுபதி  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கவர்னர் வேலையாக வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்படுவதாக கவர்னர் கூறியது தவறான தகவல். தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. பாஜகவின் கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டிய அவர் கவர்னராக உள்ளார். மாநிலங்களில் 2 அதிகார மையங்கள் இருக்கக்கூடாது என நீதிமன்றமே கூறியிருக்கிறது. இந்தியை வைத்து மலிவான அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு இல்லை.

தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர் ஆளுநர் ரவி. தமிழ்நாடு தனித்து விடப்பட்டிக்கிறது, யாருடனும் இணையவில்லை என தவறான தகவலை பரப்பிவருகிறார். பல மாநிலங்களுடன் நல்லுறவு கொண்டுள்ள தமிழ்நாடு, பல்வேரு மாநில முதலமைச்சர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளது. மொழிவாரி சிறுபான்மையினருக்கு தமிழ்நாட்டில் முக்கியத்துவம் இல்லை என்ற ஆளுநரின் பேச்சு தவறானது. திராவிட மாடல் அரசு யாருக்கும் எதிரானது கிடையாது” என்றார்.