கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்துக்கு இதுதான் காரணம் - அமைச்சர் சக்கரபாணி பேட்டி

 
Minister sakkarabani

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்துக்கு சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது தான் காரணம் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இயங்கி வந்தது.  இந்த குடோனில் சுமார் 15 இருக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்தன. இந்த பயங்கர வெடி விபத்தில் அருகில் இருந்த கடைகள் மற்றும்  3 வீடுகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில்,  10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

கிருஷ்ணகிரி விபத்து: தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் சக்கரபாணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாயும், படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 2 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, பட்டாசு குடானில் உள்ள உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தடயவியல் துறையினர் சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் என அறிக்கை வழங்கி உள்ளனர். இவ்வாறு கூறினார்.