ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்?- அமைச்சர் பரபரப்பு தகவல்

 
ration shop

சென்னை அண்ணா நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன மயமாக்கப்பட்ட அமுதம் மக்கள் அங்காடி மற்றும் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள இரண்டு அமுதம் நியாய விலைக்கடை கட்டிடங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், உணவு வழங்கல் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Minister Sakkarapani

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “மானிய கோரிக்கையில் 100 அமுதம் அங்காடி தொடங்குவோம் என கூறினோம். அதன் அடிப்படையில் அண்ணா நகரில் புதிய மேம்படுத்தப்பட்ட அங்காடியை திறந்துள்ளோம். ஏற்கனவே கோபாலபுரத்தில் வைக்கபட்ட அமுதம் அங்காடியில் சிறப்பான முறையில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. விரைவில் கொளத்தூரிலும் காஞ்சிபுத்திலும் அமுதம் அங்காடிகளை திறக்க உள்ளோம். அமுதம் அங்காடியில் இருந்து வீடு வீடாகப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தயாநிதி மாறன் வைத்துள்ளார். அதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம்.

தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 30 ஆயரம் பேருக்கு குடும்ப அட்டை தயாராக உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசளித்து தகுதியானவர்களுக்கு  குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 17 லட்சத்து 30000 பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்ற ஆகஸ்ட் வரை 37 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் குவிண்டாலுக்கு 2500 தருவதாக கூறினோம். தற்போது குவிண்டாலுக்கு 2450 ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு 2500 ரூபாய் வழங்கப்படும். நெல் கொள்முதல் விலையை சொன்னபடி முதல்வர் உயர்த்தியுள்ளார்கள்.

கணக்கு தெரியாத ஒருத்தரு.. லஞ்சம் கொடுத்து மாட்டுன ஆளு.. லெஃப்ட் & ரைட்  வாங்கிய அமைச்சர் சக்கரபாணி! | Minister Sakkarapani retaliates BJP annamalai  and TTV Dinakaran - Tamil ...

ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட இரு மடங்கு பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்கள். வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் வைக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்தான ஆய்வு நடைபெற்று வருகிறது. மற்ற கடைகளை ஒப்பிடும் போது அமுதம் அங்காடியில் விலை குறைவாக இருக்கும். லாப நோக்கமின்றி விலைவாசியை கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது. 100 அங்காடிகள் என்பதோடு இல்லாமல் மக்களின் வரவேற்பினை பொறுத்து மேலும் கடைகள் திறக்கப்படும்” எனக் கூறினார்.