அமைச்சர் சேகர்பாபு 40 பேரை அழைத்து வந்து ரவுடிசம் செய்தார் - ஆதவ் அர்ஜுனா அட்டாக்..!

aadhav

தமிழக சட்டமன்ற தேர்தலில், சென்னை வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) சென்னை லயோலோ கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை இன்று நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது,

வாக்கு எண்ணிக்கையின்போது தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் நேர்மையான முறையில் வாக்கு எண்ண வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். அதை நிறைவேற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம்.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளோம். ஆனால், இங்கு வாக்குப்பெட்டிகள் வைத்துள்ள அறை மிகவும் சிறியதாக உள்ளது. இங்கு 5 பேருக்கு மேல் நிற்க முடியாத அளவுக்கு சிறிய அறைகளாக உள்ளன. கால அவகாசம் கொடுத்து சரியாக வாக்குகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்

வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் வேட்பாளர்கள் சுழற்சி முறையில் பார்வையிட்டு செல்ல வேண்டும் என்று 234 தொகுதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுக எப்போது தோற்கிறார்களோ அந்த கடைசி நிமிடத்தில் ரவுடிசத்தை கையில் எடுப்பார்கள். அதைத் தான் துறைமுகம் தொகுதியில் பார்த்தோம். மாலை 5 மணி அளவில் அமைச்சர் சேகர்பாபு 40 பேரை அழைத்து வந்து ரவுடிசம் செய்தார். சைதாப்பேட்டையில் எங்கள் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.