‘இதெல்லாம் தேர்தலுக்காக அல்ல’... முருகன் மாநாட்டை அரசியல் ஆக்க வேண்டாம்- சேகர்பாபு

 
அமைச்சர் சேகர்பாபு

முத்தமிழ் முருகன் மாநாட்டை அரசியல் ஆக்க வேண்டாம். இந்த நிகழ்ச்சியை பெருமையாக கருத வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பட்டினப்பிரவேசம்.. இந்த வருஷம் ஓகே.. ஆனால் அடுத்த வருஷம்.. சூசகமாக செக்  வைக்கும் அமைச்சர் சேகர் பாபு | Plan something else next year: Sekar Babu on  Dharmapuram Adheeman ...


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில்  இராமச்சந்திர ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பத்திரிக்கை உலகின் தந்தையாக கருதப்படும் ஆதித்தனார் புதல்வன் ராமச்சந்திரா ஆதித்தனார் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதை மாபெரும் கடமையாக கருதுகிறோம். முத்தமிழ் முருகன் மாநாடு குறித்து சீமான் புரிந்தும் புரியாதது போல் பேசுவார். அறிந்தும் அறியாதது போல் பேசுவார். தட்டு சுற்றி பூசணிக்காயை மறைக்கும் வித்தையைக் கற்றவர் சீமான். திருச்செந்தூரில் ரூ.300 கோடி அளவில் மாபெரும் திருப்பணிகள் நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடக்கும்.

பழனியில் 50 ஏக்கர் நிலத்தை 58 கோடி செலவில் இரண்டாவது பெருந்திட்ட வரைவுக்கு எடுக்க உள்ளோம். திருப்பரங்குன்றத்திற்கும் 66 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுவாமிமலைக்கு மின் தூக்கி உள்ளிட்ட 20 கோடி செலவில் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரை 1922 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இவற்றையெல்லாம் தேர்தலை மையப்படுத்தியா செய்கிறோம். முத்தமிழ் முருகன் மாநாட்டை அரசியல் ஆக்க வேண்டாம். இந்த நிகழ்ச்சியை பெருமையாக கருத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.