"கால் நூற்றாண்டு திமுகவை தோளில் சுமக்கவுள்ளார் உதயநிதி"- அமைச்சர் சேகர்பாபு
அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், மக்கள் நலனையும் உதயநிதி ஸ்டாலின் தோளில் சுமக்கவுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு, “பாஜக தமிழ்நாட்டில் தகுதியில்லாத இயக்கம் என்பதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக அளித்தனர். தமிழக மக்களிடம் செல்லாக்காசாகிப் போன பாஜகவின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை. அடுத்த கால் நூற்றாண்டு காலம் திமுகவையும், மக்கள் நலனையும் தோளில் சுமக்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின்” என்றார்.
திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமாகிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 3.30 மணியளவில் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது.