ஈ.பி.எஸ். பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்
கோவை அன்னூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை அன்னூரில் அவினாசி-அத்திகடவு திட்ட குழு சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில், அவர் புறக்கணித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் விழா மேடையில், அழைப்பிதழில், விளம்பர பதாகைகளில் இல்லை. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் இல்லை என்பதை, விழாக்குழுவினரிடம் 3 நாட்களுக்கு முன்னதாகவே சுட்டிக்காட்டியும் நடவடிக்கை இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் நாங்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். நான் விழாவை புறக்கணித்ததாக அர்த்தம் கிடையாது. விழாவுக்கு செல்லவில்லை என கூறினார்.


