"இனிமேல் சும்மா இருக்க மாட்டோம்... அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி!

 
senthil

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்வாரியத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே டெண்டர் எடுத்து லாபம் பெற முயற்சிக்கிறார்கள். கடந்த 2006 - 11 ஆட்சிக்கால பாதைக்கு திமுக சென்றால் வேறு வழியில்லை. ஒவ்வொரு ஆவணங்களாக வெளியிடுவோம். மின்சாரத்துறை அமைச்சர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கூறி சர்ச்சையை கிளப்பினார். கடுப்பான செந்தில் பாலாஜி, ஆதாரத்தை வெளியிடுமாறும் அதை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

annamalai senthil balaji

இதையடுத்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதாரங்களை வெளியிட்டார். அதற்கு செந்தில் பாலாஜி உரிய விளக்கத்தை அளித்தார். அண்ணாமலையிடம் ஆதாரத்தை கேட்டா வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல் வெளியிட்டுருக்கிறார் என்று விமர்சித்திருந்தார். இதன் பிறகு அண்ணாமலை மீண்டும் கோபாலபுரம், பிஜிஆர் எனர்ஜி, மின்சார அமைச்சகம் , V. செந்தில் பாலாஜி. இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்... விடை எளிதில் புரியும்! என்று பதிவிட்டார். 

அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, இது புது ஒப்பந்தமில்லை. பாஜகவும் அதிமுகவும் கூட்டணியாய் இருந்த போதே நிகழ்ந்த ஒப்பந்தம். ஒப்பந்த தொகையும் எடப்பாடி அரசு நிர்ணயம் செய்ததே. முழுக்க அதிமுக ஆட்சியில் நடந்த நிகழ்வுகள். தெரிந்து சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள். இருவரது நேரத்தையும் வீணடிக்காதீர்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே, அண்ணாமலை 24 மணி நேரத்துக்குள் ஆதாரத்தை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டுமென கெடுவிதித்திருந்தார். அதற்கு பிறகே இந்த ட்விட்டர் மோதல் நடைபெற்றது.

senthil balaji

இந்த நிலையில், ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின்துறை மீது புகார் அளித்தவர்கள் 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், சமூக வலைதளங்களில் போகிறபோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை போகக்கூடாது. ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைத்தால் அதற்கு இனிமேல் பதில் சொல்லப்போவதில்லை. அரசின் மீது அவதூறு பரப்புவதை பார்த்துக் கொண்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.