அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்கள் சிகிச்சை - காவேரி மருத்துவமனை தகவல்

 
செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது - காவேரி மருத்துவமனை தகவல்..

அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக உணவு எடுத்து கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர்,  அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  ஆஞ்சியோகிராம் சோதனையில் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பதாகவும்,  அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றாப்பட்ட அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர்  உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை அடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார். 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த தேதியில் பைபாஸ் சர்ஜரி.. காவேரி மருத்துவர்கள்  முடிவு..

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக உணவு எடுத்துக் கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி குழாய் வழியாக உணவு எடுத்துவந்த நிலையில், இன்று அவரே உணவு எடுத்துக்கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அவருக்கு மேலும் 20 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அல்லது புழல் சிறை அனுமதி பெற்று செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை காவேரி மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள தனி வார்டில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், இதுவரை யாரும் அவரை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.