அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..

 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - ஐகோர்ட்டை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..


செந்தில் பாலாஜி மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த சென்னை முதன்மை கோர்ட்டு செசன்ஸ் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை நாட நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது  புழல் சிறையில் இருந்து வருகிறார்.  அவருக்கு எதிராக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் 120 பக்க குற்றப் பத்திரிகை நகல் மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களையும்  தாக்கல் செய்தது.  அப்போது, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் என்ற சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஜாமீன் கோரி அவர்  சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தான்  தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.  

Highcourt

இதைத்தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி  செந்தில் பாலாஜி   மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக்கொண்டார். ஆனால் நீதிபதி அல்லி,  இந்த ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தனக்கு உள்ளதா? என்பதை பார்க்க வேண்டியது இருப்பதாகவும், ஜாமீன் மனுவுக்கு மனு எண் வழங்கப்பட்டு விசாரணைக்கு பட்டியலிடட்டும் பார்க்கலாம் என்றும் நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

senthil balaji

அப்போது  ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.  அதன்பேரில் செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும்  சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டது.  இந்த நிலையில், அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்,  ஜாமீன் தொடர்பாக  உயர்நீதிமன்றத்தை நாடுமாறு  செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற  உத்தரவு இல்லாமல் தன்னால் இந்த வழக்கை  விசாரிக்க முடியாது என்றும்,  உயர்நீதிமன்றத்தை அணுகி ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவெடுக்குமாறும்  சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தெரிவித்தார்.