அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

 
tn

 அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

senthil balaji

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாகவும்,  சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.  இதை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

supreme court

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார்.  அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  காவிரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி நேற்று இரவு புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.