கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

 
tn

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் மேற்கொண்டார் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். 

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்த நிலையில், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் மேற்கொண்டார் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பேருந்துகள் இயக்கம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.