பழைய பேருந்துகள் விரைவில் மாற்றப்படும் - அமைச்சர் சிவசங்கர்

 
சிவசங்கர்

தமிழ்நாட்டில் இயக்கப்படும் 1,500 பழைய பேருந்துகளை  விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார்.

5 வயது வரை இனி அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லை- போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு..

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா காலத்திற்குப் பிறகு தனியார் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும் புரட்சி பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் மாணவிகளின் கல்லூரி வருகை அதிகரித்துள்ளதால் தற்போது அரசு பேருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை தீர்க்கும் பொருட்டு முதல்வரின் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் இணைந்த whatsapp குழு அமைத்து அவர்களுக்கு உரிய பேருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் 100 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் போடப்பட உள்ள நிலையில், அது சென்னையில் பெரும் வெற்றியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக மின்சார பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படும். 15 ஆண்டுகாலம் ஆன பேருந்துகள் என 1500 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தினால் கிராம பேருந்துகள் சேவை பெருமளவில் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் திறக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதத்தில் புதிய பேருந்துகள் வந்துவிடும். அதன் பிறகு 15 ஆண்டுகள் இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 பணியிடங்கள் தற்பொழுது நிரப்பப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மற்ற போக்குவரத்து பணிமனைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.