தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1,600 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன: அமைச்சர் சிவசங்கர்

 
சிவசங்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் முதற்கட்டமாக 1600 புதிய பேருந்துகள் இன்னும் இரண்டு மாதத்திற்குள் இயக்கப்படுவது உறுதி என தமிழக போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

School students can travel by bus using old travel card - Minister  Sivasankar | பள்ளி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம்  செய்யலாம் - அமைச்சர் சிவசங்கர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைநேற்று பெரம்பலூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடை பயணத்தின் போது அரசு போக்குவரத்து கழகத்தில் வாகன உதிரிபாகங்கள் வாங்கியதில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 2000 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று பெரம்பலூரில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, அண்ணாமலை தனது சுய லாபத்திற்காக இதுபோன்று பல்வேறு இடங்களில் தமிழக அமைச்சர்களை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசி வருவது அரசியல் சுய லாபத்திற்காகவும் பரபரப்புக்காகவும் காட்டமாக தெரிவித்தார். மேலும் 15 ஆண்டுகள் இயக்கப்பட்ட அரசுபேருந்துகளை தகுதியற்றவை களாக கருதி அவற்றை இயக்க கூடாது என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டும் அவைகள் இயக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து பதிலளித்த அவர், தமிழ்நாடடில் சுமார் 1700 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்ப்படுபவை என்பது தவறான கருத்து கொரோனா காலக்தில இரண்டாண்டுகள் அவை பணிமனையிலேயே நிறுத்தப்பட்டிருந்தவை என்பதால் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அந்த பேருந்துகளை பழுதுநீக்கி இயக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்... எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்  என்னென்ன?!| New Transport Minister SS Sivasankar What are the challenges  for the new minister? - Vikatan

தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், “தமிழகத்தில் முதற்கட்டமாக இன்னும் இரண்டு மாதங்களில் 1,600 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டவுடன் பழைய பேருந்துகள் படிப்படியாக கழிகப்படும். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர் பணியிடங்கள் துளிக்கூட நிரப்பபடாத நிலையில் தற்போது முதற்கட்டமாக விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 685 ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வரும் 19 ஆம் தேதி அதற்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் கூடிய விரைவில் மேலும் 2500 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது” என்றார்.