ஆம்னி பேருந்து சங்கத்துடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!!

 
Sivasankar

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய தொடர் விடுமுறையையொட்டி, அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இந்த சூழலில் கூடுதல் கட்டண புகார் தொடர்பாக தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். எனவே சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்கக்கோரி இன்று  மாலை 6 மணிமுதல்ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று  தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 

omni bus

அதிக கட்டணம் வசூல் செய்த காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான ஆம்னி பேருந்துகள், வெளி மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயக்கப்படுபவை. போக்குவரத்துத் துறை ஆர்.டி.ஓ. மூலம் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு, கட்டண உயர்வு மட்டுமே காரணம் அல்ல என அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

busஇந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்,  பேச்சுவார்த்தைக்குப்பின் ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் கைவிடப்படும் என நம்பிக்கை உள்ளது. ஆம்னி பேருந்துகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிறைப்பிடித்த ஆம்னி பேருந்துகளில் தவறுகள் இல்லையென்றால் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் . ஆம்னி பேருந்து வேலைநிறுத்தம் இன்று மாலையில் தொடர்ந்தால் அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றார்.