தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் - அமைச்சர் ஆய்வு

 
thangam thennarasu

தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். 

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உடுத்திய துணி தவிர மாற்று துணிகளுக்கு கூட வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது.  வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது.  வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.  அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைமையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், வரலாறு காணாத அளவிற்கு  பெய்த பெருமழை காரணமாக தென் மாவட்டங்களில் பெருவாரியான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களில் மழை வெள்ளத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஜெயசீலன் இ.ஆ.ப அவர்களுடன்  இணைந்து பார்வையிட்டு, விவசாய பெருமக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் ஆவன செய்யப்படும் எனவும் உறுதி அளித்தோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.