இன்று மாலைக்குள் சென்னையில் மின்சார விநியோகம் சீராகும் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

 
தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

இன்று மாலைக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பான்மையான பகுதிகளில் மின்சார விநியோகம் சீராகும் என தமிழக நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

இன்று  (05.12.2023)   சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள  மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:  இன்று மாலைக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பான்மையான பகுதிகளில் மின்சார விநியோகம் சீராகும். 100-120  மெகாவாட் ஆக இருந்த மின்சார நுகர்வு , தற்போது படிப்படியாக நுகர்வு அதிகரித்து 789 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. மேலும், பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கே இருந்து தான் மற்ற பகுதிகளுக்கு மின்சார விநியோகம்  நடைபெறும். எந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தற்போது ஆய்வு செய்து வருகிறோம். கிருஷ்ணகிரி கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.