தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தம் அளிக்கிறது - தங்கம் தென்னரசு பேட்டி

 
thangam thennarasu

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒருபோதும் திமுக அரசால் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்றனர். தற்போது கூட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் . நிதி நெருக்கடிக்கு இடையே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம். நிதி நெருக்கடி இடையே தான் பொங்கல்  பரிசு ரூ.1000 அறிவிக்கப்பட்டுள்ளது.

thangam thennarasu

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது.  தமிழ்நாடு அரசு நிதி பகிர்வாக வழங்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவைதான் மத்திய அரசு திரும்ப அளிக்கிறது.  பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்குகிறது.  தமிழ்நாட்டிற்கான உரிய நிதிப் பகிர்வு கிடைப்பதில்லை. தமிழ்நாடு அரசிடமிருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி மத்திய அரசு பெற்றுள்ளது.  மறைமுக வருவாய் குறித்து மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.