ஜூலை 1 முதல் திமுக உறுப்பினர் சேர்க்கை- தங்கம் தென்னரசு
Jun 24, 2025, 15:21 IST1750758689194
ஜூலை 1 முதல் 3 வரை உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஜூலை 1 முதல் 3 வரை உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற உள்ளன. ஜூலை 1ல் திமுக உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். தமிழ்நாடு மக்கள் எப்போதுமே ஓரணியில் நின்று கருத்துகளைத் தெரிவிப்பார்கள். வடமொழிக்கு முக்கியத்துவமும், நிதி ஒதுக்கீடும் அதிகம். செம்மொழி தகுதியை பெற்றிருக்கக்கூடிய தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கு இந்த முக்கியத்துவம் இல்லை.
தமிழ்நாட்டில் நாள்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை உரிய முறையில் மேலாண்மை செய்திடவும், நம் நகர்ப்புற-ஊரகப் பகுதிகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும் தொலைநோக்கு பார்வையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என்றார்.


