“திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மணிமகுடத்தில் பொறித்த வைரக்கல்”- தங்கம் தென்னரசு பெருமிதம்

 
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...   ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என அமைச்சர்  தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

இதுதொடர்பாக அமைச்சர்  தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில், “பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என்ற சாதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம். நமது சாதனையை நாம் தான் முறியடிக்க வேண்டும் என்பதற்கேற்ப 9.69% என்று இந்தியாவிலேயே முதலிடத்திலிருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 11.19% என புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது நமது திராவிட மாடல் அரசு.

"எல்லார்க்கும் எல்லாம்" என்ற தத்துவத்தோடு அனைத்து துறைகளிலும் தொலைநோக்கு பார்வையுடன் கவனம் செலுத்தி, அதனைத் திறம்படச் செயல்பட வைத்த நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தான் இருமுறை இந்த சாதனை நமக்கு சாத்தியமாகியுள்ளது. மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளது போல், விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டி சாதனை படைக்கும் என்பது உறுதி. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும்  தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.