“முதலமைச்சர் சொன்னார்… செய்தார்” - டி.ஆர்.பி.ராஜா

 
trb raja trb raja

இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராகத் திகழ்கிறார் நம் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் என தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

No Sterlite But Ford Plant Revival Likely, Says Tamil Nadu Minister TRB  Rajaa

இதுதொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் 7 அம்ச உறுதிமொழிகளை வெளியிட்டு மக்களிடம் வாக்கு கேட்டார் திராவிட நாயகன் நம் கழகத் தலைவர். அதில் முதல் அம்சம், பொருளாதாரம். “வளரும் வாய்ப்புகள்-வளமான தமிழ்நாடு அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்க பொருளாதாரத்தை எட்டுவது முதல் இலக்கு” என்று உறுதியளித்தார். அவரது வாக்குறுதியை நம்பி வாக்களித்து தன்னை முதலமைச்சராக்கிய மக்களுக்காக ஓயாது உழைத்து, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியடைய வைத்து, தான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றியுள்ளார். 

திருச்சி சிறுகனூரில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்த நாள் 2021 மார்ச் 7. தமிழ்நாடு 11.29% என்ற இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டியிருப்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்துறை அறிவித்துள்ள நாள் 2025 ஆகஸ்ட் 5. பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற நம் தலைவர் அதனை நான்கே ஆண்டகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆகையால்தான் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராகத் திகழ்கிறார் நம் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.