துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் அமைச்சர் மகள் சாதனை - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

 
rn

66-வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகள் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியின் சுஹ்ல் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், ஜூனியர் உலகக் கோப்பை 2023 நடைபெற்றது.   இந்த போட்டியில் ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன் பிரிவில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு தேர்வாகி பங்கேற்றார்.  அதேபோல் முன்னதாக டெல்லியில் நடைபெற்ற 65 வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் நிலா ராஜா தங்க பதக்கம் வென்றார்.


இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை செல்வி. நிலா ராஜா பாலு சந்தித்து, டெல்லியில் நடைபெற்ற 66-வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பெண்கள் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதையொட்டி வாழ்த்துப் பெற்றார்.