"நலவாழ்வு நடைப்பயிற்சி திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்க" - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

சென்னையில் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஜப்பானில் இருப்பதைப் போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், 'ஹெல்த் வாக்' சாலைகள் அமைக்கும் திட்டத்தைச் சென்னை பெசன்ட் நகரில் இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  

tn

ஜப்பானில், மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த 8 கி.மீ-க்கு ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் தினமும் 10,000 அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், அதற்கேற்றவாறு இச்சாலைகள் அமைக்கப்படுகிறது. 

tn

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின்  தனது சமூகவலைத்தள பக்கத்தில், நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது. இதற்கு ஆரம்பகட்ட தீர்வாக மருத்துவ உலகம் முன்வைப்பது முறையான நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் தான்.


எனவே, அனைத்து மாவாட்டங்களிலும் நமது அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி #8KmHealthWalk திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.