நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கினார் அமைச்சர் உதயநிதி

 
Udhayanidhi Stalin

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளை இழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தென் மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது.  வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளை இழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ள பாதிப்பு விவகாரத்தில் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருகிறார்கள். என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை பார்க்க மத்திய அமைச்சின் நிர்மலா சீதாராமன் வர இருக்கிறார். பாதிப்புகளை அவர் நேரில் ஆய்வு செய்த பின்பு உரிய நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு கூறினார்.