மாற்றுத்திறனாளி தடகள வீரர் ராஜேஷ்க்கு செயற்கை கால்கள் பொறுத்த நிதியுதவி - அமைச்சர் உதயநிதி வழங்கினார்
மாற்றுத்திறன் தடகள வீரர் ராஜேஷ்க்கு செயற்கைக் கால்கள் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ₹12 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதற்காக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதே போல, ஆண்கள் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் விளையாட்டுத்துறையில் சாதிக்க துணை நின்று வருகிறோம்.
இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதற்காக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
— Udhay (@Udhaystalin) January 27, 2024
அதே போல, ஆண்கள் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் விளையாட்டுத்துறையில் சாதிக்க துணை நின்று வருகிறோம்.
அந்த… pic.twitter.com/fHdl7VA6Mp
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரர் சகோதரர் ரா.ராஜேஷ் அவர்களுக்கு செயற்கைக் கால்கள் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ரூ.12 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி வாழ்த்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.