ஏரல் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி!

 
udhayanidhi udhayanidhi

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஏரல் அருகே பெருங்குளம் பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். 

கனமழை பாதிப்புக்கு உள்ளான தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதேசமயம், நிவாரண உதவிகளையும் தங்கு தடையின்றி வழங்கி வருகிறோம். அந்த வகையில், ஸ்ரீ வைகுண்டம் தொகுதி, ஏரல் வட்டத்திற்குட்பட்ட பெருங்குளத்தில் பொது மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை அடங்கிய நிவாரண தொகுப்புகளை இன்று வழங்கினோம். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நிலைமையை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மக்களிடம் எடுத்துக் கூறினோம்.


இதேபோல் அவர் மற்றொரு பதிவில், இதுவரை கண்டிடாத அளவுக்கு பெய்த கனமழையாலும் - தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனை  நேரில் ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி - ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் பேரூராட்சி நடூர் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். அப்பகுதி மக்கள், அனைத்து வகையிலும் பாதிப்பில் இருந்து மீண்டுவர உறுதுணையாக இருப்போம் என நம்பிக்கை அளித்தோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.