வெள்ள நிவாரண நிதி ரூ.6000 இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி

 
udhayanidhi udhayanidhi

வெள்ள நிவாரண நிதி இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு நிவாரண தொகை ரூ.6000 வழங்கப்படும். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திருப்புகழ் ஐஏஎஸ் அறிவுறுத்தலின் அடிப்படையில் அமைக்கபட்டதால் தான், பெருமளவு மழைநீர் தேங்கவில்லை

பெரும்பாளான பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது, இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.எதிர்கட்சிகள் வெள்ளை அறிக்கை குறித்து சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள், நாம் நமது வேலையை பார்ப்போம். தற்போது சென்னை உள்ள நிலைமையில், கார் பந்தயம் வேண்டாம் என ஒத்தி வைத்துள்ளோம். கார் பந்தயம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இவ்வாறு கூறினார்.