பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி - பரபரப்பு பேட்டி

 
Udhayanidhi Udhayanidhi

பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். 

சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். அவர் பிரதமர் மோடியிடம் அதற்கான அழைப்பிதழை வழங்கினார். 

இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கிய பின் சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கினேன். பிரதமர் மோடி திருச்சி வந்திருந்த போது பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கு நினைவூட்டினேன்.  இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னிடம் தூத்துக்குடி வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அவரிடம் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து விளக்கி கூறினார்.