திமுகவிற்கு யார் போட்டி என்பதில் தான் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே போட்டி!!

 
udhayanidhi stalin udhayanidhi stalin

திமுகவிற்கு யார் போட்டி என்பதில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே போட்டி நடப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

udhayanidhi

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , திமுகவிற்கு யார் போட்டி என்பதே அதிமுகவிற்கும் பாஜகவுக்கும் உள்ள போட்டி. தமிழகத்தில் சாதிய பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல மாட்டேன், பிற மாநிலங்களை விட இங்கு குறைவுதான்; ஆளுநர் பிற மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமையை முதலில் பார்க்க வேண்டும்.

Udhayanidhi

தினமும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை போல் ஐ.டி அதிகாரிகள் ஆகிவிட்டனர் கொடுத்த வாக்குறுதியை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்; போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் சனாதனம் குறித்து கண்டிப்பாக பேசுவேன்; முதலில் CAG அறிக்கை குறித்து பேசுவோம், அதன் பிறகு சனாதனம் குறித்து பேசுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.