"பழனி முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்" - அமைச்சர் உதயநிதி

 
உதயநிதி ஸ்டாலின்

முத்தமிழ் மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாநாட்டை துவக்கி வைத்தார் . மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி, குமரகுருபர சுவாமிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். தொடர்ந்து பக்தி இசை கச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம் என நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. 

இந்நிலையில் விழாவில் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கிய உதயநிதி ஸ்டாலின், “இந்து சமய அறநிலையத்துறை பொற்காலம் என்றால் அது திமுக ஆட்சியில்தான். கடந்த 3 ஆண்டுகளில் 1,400 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திராவிடம் என்பது எல்லோருக்கும், எல்லாம் என்பது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றேன்றும் இடம்பெறுவது உறுதி. இந்த மாநாடு ஆன்மீக மாநாடாக மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. சேகர் பாபுவை செயல் பாபு என்று முதலமைச்சர் சொல்வது இந்த மாநாடு மூலம் உண்மையாகி விட்டது” என்றார்.