கலைஞர் நூற்றாண்டில் இந்தியா வெல்லட்டும், பாசிசம் வீழட்டும் - உதயநிதி ஸ்டாலின் டுவீட்

 
Udhayanidhi

முத்தமிழ் அறிஞர் காட்டிய பாதையில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, பாசிஸ்ட்களை வீட்டுக்கு அனுப்ப இந்நாளில் உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  பெரியாரின் கொள்கை உறுதி - அண்ணாவின் லட்சிய வேட்கை, இவற்றின் அரசியல் முகமாகவும், வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டின் தளகர்த்தராகவும் திகழ்ந்த நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் நினைவு நாள் இன்று. தமிழ்நாட்டின் வழியாக இந்திய ஒன்றியத்தின் அரசியல் - சமூக -  பொருளாதார போக்கை தீர்மானித்த கலைஞர் அவர்கள் உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் இதயத்திலும் - உடன்பிறப்புகளின் உயிரிலும் கலந்து நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


முத்தமிழ் அறிஞர் காட்டிய பாதையில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, பாசிஸ்ட்களை வீட்டுக்கு அனுப்ப இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் நூற்றாண்டில் இந்தியா வெல்லட்டும், பாசிசம் வீழட்டும். #என்றென்றும் கலைஞர். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.