நீட் விலக்கு எனும் நம் இலக்கை நிச்சயம் வென்றெடுப்போம் - உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanidhi

நீட் விலக்கு எனும் நம் இலக்கை நிச்சயம் வென்றெடுப்போம் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.கழகத்தால் தொடங்கப்பட்டுள்ள, 'நீட் விலக்கு - நம் இலக்கு' கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாடெங்கும் மாணவர்கள் - பெற்றோர்கள் - பொதுமக்கள் பெரும் ஆதரவளித்து கையெழுத்திட்டு வருகிறார்கள். 


அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் நீட்டுக்கு  எதிராக பெறப்பட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமான கையெழுத்துகளை கொண்ட அஞ்சல் அட்டைகளை, உதகமண்டலத்தில் இன்று நடைபெற்ற நீலகிரி மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தின் போது பெற்றுக்கொண்டோம். நீட் விலக்கு எனும் நம் இலக்கை நிச்சயம் வென்றெடுப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ள்ளார்.