இந்த தேர்தல் இந்தியாவுக்கே முக்கியமான தேர்தல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
udhai

தமிழ்நாட்டை காக்க ஓரணியில் நின்று தேர்தல் வெற்றிக்கு உழைப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திட, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்துள்ளார்கள். இக்குழுவின் சார்பில், சேலம் மக்களவைத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம். இந்தக் கூட்டத்தின் போது, சேலம் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர், மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் செயலாளர்கள், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து தொகுதியில் தற்போதுள்ள சூழல் மற்றும் கள நிலவரம் குறித்து அவர்களின் கருத்துக்களை தனித் தனியாகக் கேட்டறிந்தோம். 


மேலும், சட்டமன்ற தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் - பாக முகவர்களின் பணிகளையும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைந்துள்ள விதம் தொடர்பாகவும் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.  இந்த சந்திப்பின் போது, சேலம் மேற்கு மாவட்டக்கழகம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொங்கனாபுரம் மேற்கு ஒன்றியக்கழகச் செயலாளர் அண்ணன் பரமசிவம் அவர்கள் நம்மை சந்தித்தார்.  14 வயது முதல் கழகத்தில் பணியாற்றி வரும் அவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றியக்கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். கலைஞர் அவர்கள் - பேராசிரியர் தாத்தா - கழகத்தலைவர் அவர்கள் கையொப்பொமிட்ட உறுப்பினர் அடையாள அட்டைகளை பெருமையுடன் நம்மிடம் காண்பித்தார். இந்தத் தேர்தல் இந்தியாவுக்கே முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டை காக்க ஓரணியில் நின்று தேர்தல் வெற்றிக்கு உழைப்போம் என வந்திருந்த அனைத்து நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.