விளையாட்டு வீரர்களுடன் நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் - உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi udhayanidhi

தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையர்கள் அதிக உயரம் செல்ல நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் நம்  வீரர் – வீராங்கனையரை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து உயரிய ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். அந்த வகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற தேசிய & பன்னாட்டு அளவிலானப் போட்டிகளில் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித் தந்த, 609 வீரர் - வீராங்கனையர் - மாற்றுத்திறனுடைய வீரர் - வீராங்கனையருக்கு கழக அரசு சார்பில் ரூ.16.24 கோடியை உயரிய ஊக்கத் தொகையாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இன்று வழங்கினோம்.

tn

மேலும், பல்வேறு போட்டிகளில் சாதனைகளைப் படைத்து வரும் வீரர் - வீராங்கனையர் 4 பேருக்கு விளையாட்டு வீரர்களுக்கான 3 % இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.  'நீண்ட தூரம் ஓடினால் தான், அதிக உயரம் தாண்ட முடியும்' என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாக்குப்படி, நம் தமிழ்நாட்டு  விளையாட்டு வீரர் - வீராங்கனையர் நீண்ட தூரம் ஓடவும் - அதிக உயரம் தாண்டவும், நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.