ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு ஸ்பான்சர் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டதா?- உதயநிதி பதில்

 
உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 589 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.13.98 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

udhayanidhi stalin says dmk not fear anyone


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை தலைநகராக மாற்றுவோம். ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பலர் பங்கேற்கும் சூழல் ஒருநாள் வரும். விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தயாராக இருக்கிறது. சென்னையில் ஆகஸ்ட் 30  மற்றும் செப்டம்பர் 1 தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிர்பார்த்தைவிட நிறைய ஸ்பான்சர் வந்திருக்கிறார்கள். ஸ்பான்சர் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. யாராவது ஒரு பெயரையாவது சொல்ல சொல்லுங்க..? ஸ்பான்சர எப்படிங்க கட்டாயப்படுத்த முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.


பார்முலா 4 போட்டிக்காக கடந்த ஆண்டு 40 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் செலவு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 30 கோடி ரூபாய் செலவாகி உள்ளது என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாதன் ரெட்டி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.