முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்!
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பறிமாறியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அமைச்சர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அமைச்சர்கள் திரு. துரைமுருகன், திரு. கே.என்.நேரு, திரு. எ.வ.வேலு, திரு. பி.கே.சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி.ஆர்.பாலு, திரு. எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.


