10, 15 ஆண்டுகளுக்கு பின் சாலைகள் போடும் பணி தீவிரம்- அமைச்சர் ரகுபதி

 
ரகுபதி

கடந்த 10, 15 ஆண்டுகளில் சாலை பணிகள் நடைபெறாத இடங்களில் எல்லாம் இன்று சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற காட்சியை காண முடிகிறது. இதற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த முன்னுரிமை தான் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் கிராம ஊராட்சிகளின் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புக்காக 71.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருமயம் வட்டாட்சியர் புவியரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிராமங்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடிய முதலமைச்சராக இருந்த காரணத்தினால் தான் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் கொண்டுவரப்பட்டு 10, 15 ஆண்டுகள் சாலை பணிகள் நடைபெறாத இடங்களில் எல்லாம் இன்று சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிற காட்சியை காண முடிகிறது.

இதற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த முன்னுரிமை தான். அதேபோல கிராம வளர்ச்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு  கிராம மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமுடன் செயல் படியக்கூடிய அரசு தற்போதைய தமிழ்நாடு அரசு என்றும் இந்த ஆட்சியில் போதுமான நிதி கிடையாது என்ற போதிலும் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கோடு குறிப்பாக குடிநீர் பிரச்சினைகள் இருக்கக் கூடாது என்பதற்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு வழங்கப்பட்டதை விட இன்னும் கூடுதலான வீடுகள் பெற்று இன்னும் கூடுதலான வீடுகள் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் முதலமைச்சர் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது இன்னும் கூடுதலாக கலைஞரின் கனவு இல்லம் கிடைக்கும். மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை என்பதில் உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடைபெறுகிறது” என்றார்.