கூடலூரில் மாயமான 2 குழந்தைகளின் கதி என்ன? 50 பேர் கொண்ட குழு தேடுதல் வேட்டை

 
கூடலூரில் மாயமான 2 குழந்தைகளின் கதி என்ன? 50 பேர் கொண்ட குழு தேடுதல் வேட்டை

கூடலூரில் காணாமல் போன பழங்குடியின குழந்தைகளை தேடும் பணியில் இரண்டாவது நாளாக  வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் 50 பேர் குழுக்களாக பிரிந்தும் வனப்பகுதியில்   ட்ரான் கேமராக்கள் மூலமாகவும் தேடுதல் பணியில் ஈடுபட்டுளனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கொல்லி என்னும் பழங்குடியின கிராமத்தில் வசித்து வருபவர் காளான். காட்டுநாயக்கர் என அழைக்கப்படும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த இவர்கள், வனத்தை  ஒட்டி உள்ள பகுதிகளிலே பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் சென்று தேன் எடுப்பது பாடக்கிழங்கு கிழங்கு எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் கடந்த 29ஆம் தேதி காளன் மற்றும் அவருடைய மனைவி சைலா இரண்டு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தேன் எடுப்பதற்காக  வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த குழந்தைகள் திடீரென காணாமல் போனதாக அவருடைய உறவினர்கள், அப்பகுதி முழுவதும் தேடி உள்ள நிலையில், அவர்களைப் பற்றி எந்தவித தகவலும் தெரியாத நிலையில் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை தங்களுடைய பெற்றோர்களை தேடி வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் தீவிரமாக நடைபெற்று வந்து நிலையில், நக்சல் தடுப்பு போலீசார் ஆறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள் இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமன்றி கூடலூர் வனத்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மூலம் வனப்பகுதியில் வனப்பகுதிக்குள் குழந்தைகள் சென்று இருக்கிறார்களா தெரிந்து கொள்வதற்காக அதிநவீன ட்ரான்  கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு பணியானது நடைபெற்றுவருகிறது.